0
நாளாந்தம் இலங்கை சமூகத்திலிருந்து தூரமாகும் சமத்துவத்தை மீள ஏற்படுத்தும் சூழல் புதிய அரசியல் சூழலுடன் உருவாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உலகில் அநேக நாடுகளில் உள்ள மக்கள் கொண்டாடுவது போன்று தமிழ் மக்கள் இன்று தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழ அரசாட்சிக் காலத்தில் வருடத்தின் முதலாவது அறுவடையை கொண்டாடுவதற்காக இந்த விழா அனுஷ்டிக்கப்பட்டது அறுவடை சிறப்பாக அமைவதற்கு பங்களித்த உதவிய சகலருக்கும் மனதால் நன்றி கூறுவது இந்த உற்சவத்தின் நோக்கமாகும்.

அறுவடை சிறப்பாக அமைய காரணமான சூரிய பகவானுக்கு மட்டுமன்றி பசுக்களுக்கும் இடபங்களுக்கும் (காளை மாடு) இந்த உற்சவத்தின் போது நன்றி தெரிவிக்கப்படுகிறது. சமத்துவத்தின் மேன்மையையும் நன்ரிக் கடனின் உயர்வையும் இதைப் பொங்கல் உற்சவம் எமக்கு காட்டுகிறது.

நாளாந்தம் இலங்கை சமூகத்திலிருந்து தூரமாக வரும் சமத்துவத்தையும் மதிக்கும் குணத்தையும் நன்றி பாராட்டும் பண்பையும் மீள ஏற்படுத்தும் புதிய அரசியல் சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது. அத்தகைய நற்குணம் மிக்க சூழலை உருவாக்கும் கஷ்டமான சவாலுக்கு முகம்கொடுக்க தைப்பொங்கல் தினத்தில் உறுதி பூணுவோம்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top