0
பொருளியலாளரும், முதலீடுகள் தொடர்பான சிறப்பு நிபுணத்துவம் பெற்றவருமான அருஜூண மகேந்திரன் சிறிலங்காவின் நிதி அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காலத்தில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் தலைவராக கடமையாற்றியிருந்த மகேந்திரன், அதன் பின்னர் 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எச்.எஸ்.பீ.சி வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதனையடுத்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் என்.டி.பி என்ற முதலீட்டு வங்கியின் முதலீட்டுப் பிரிவிற்கான தலைமை அதிகாரியாகவூம் மகேந்திரன் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் மைத்ரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதும், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிலையில் சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து ஏற்பட்ட மத்திய வங்கியின் ஆளுநர் வெற்றிடத்திற்கு மகேந்திரனின் பெயரும் முன்மொழியப் பட்டது. எனினும் இறுதியில் அவர் புதிய அரசாங்கத்தின் நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராக, நிர்வாக சேவை அதிகாரியான சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஊசகருணாரத்ன பரணவிதாரன நியமனம் பெற்றுள்ளார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top