0

266 ஆவது பாப்பரசர் 

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை    கத்தோலிக்க திருச்சபையின்   266 ஆவது திருத்தந்தையாவார்.  லத்தின் அமெரிக்க நாடான     ஆர்ஜன்டீனாவை   சொந்த நாடாக கொண்ட    பாப்பரசர்   லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலிருந்து   இந்தபுனித பதவிக்கு வந்த முதலாவது  தந்தையாவார். 

கடந்த  2013 ஆம் ஆண்டு   கத்தோலிக்கத் திருச்சபையின்  266   ஆவது பாப்பரசராக பதவியேற்ற திருத்தந்தை    பிரேசில்  மற்றும்  தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு  இதற்கு  முன்னர்  விஜயம் செய்துள்ளார்.


  • 266 ஆவது பாப்பரசர் 
  • ஆர்ஜன்டீனாவிலிருந்து முதலாவது திருத்தந்தை 
  • 2013 ஆம் ஆண்டு நியமனம் 
  • இலங்கை வரும் மூன்றாவது பாப்பரசர் 
  • 1970 இல் பாப்பரசர் 6 ஆம் சின்னப்பர் வருகை 
  • 1995 இல் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்  வருகை 
இலங்கை தீவில் காலடி எடுத்து வைத்தார் புனித பாப்பரசர் (13.01.2015)
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை  இலங்கை ஜனநாயக சோஷலிஷ குடியரசின்   ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோர் உத்தியோக பூர்வமாக வரவேற்றனர்.   
 
பாப்பரசருக்கு      இராணுவ மரியாதை   கட்டுநாயக்க விமான நிலையத்தில்  வைத்து அளிக்கப்பட்டுள்ளது.  அதன் பின்னர் பாப்பரசருக்கான   தேசிய கீதமும் இலங்கையின்   தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.​  (13.01.2015)

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வரவேற்புரையாற்றியதோடு தொடர்ந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை உரையாற்றினார்.
விசேட  அதிதிகளுக்கான புத்தகத்தில்    புத்தகத்தில் கையெழுத்து இட்டார் பாப்பரசர் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபையின்    ஆயர்களை  பேராயர்   கர்தினால்  மல்கம் ரஞ்சித் ஆண்டகை   பாப்பரசருக்கு  அறிமுகப்படுத்தினார்.    தொடர்ந்து ஜனாதிபதி    மைத்திரிபால சிறிசேன இலங்கையின் அரச முக்கியஸ்தர்களை    பாப்பரசருக்கு  அறிமுகப்படுத்தினார்.
கட்டுநாயக்கவிலிருந்து  திறந்த ரத பவனியாக  நீர்கொழும்பு - கொழும்பு வீதியூடாக பாப்பரசர்  கொழும்புக்கு அழைத்துவரப்படுகின்றார்.  
வீதியில் இருபுறங்களிலிந்தும்  மக்கள் புனித பாப்பரசரை தரிசித்து கொண்டிருக்கின்றனர். 
சுமார்  இரண்டு மணிநேரத்துக்குள்  கொழும்பை வந்தடைந்தார் புனித பாப்பரசர்   

பரிசுத்த பாப்பரசர் காலி முகத்திடலுக்கு வருகை தந்துள்ளார்.



பரிசுத்த பாப்பரசரின் விசேட திருப்பலி  ஆராதனை காலி முகத்திடலில்  ஆரம்பமாகியது.
புனிதர் அருளாளர் ஜோசப் வாஸ் அடிகளார் புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
திருத்தந்தை ஒருவரினால் வேதவாசகம் வாசிக்கப்பட்டது.
திருப்பலி ஆராதனையில் கலந்துகொண்டிருக்கும் இலட்சக்கணக்கான மக்கள்

காலி முகத்திடலில் இருந்து


மன்னார் மடு தேவாலயத்தில் இருந்து


இதயத்தை கிளித்த இன்னல்களுடன் நீங்கள்: மடு அன்னை சக வாழ்வை அளிப்பார்: பாப்பரசர்
இங்கு இன்று  ஒன்று கூடியிருக்கும் குடும்பங்கள் நீண்டகால முரண்;பாடு காரணமாக இலங்கை அன்னையின் இதயத்தை கிழித்த பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்களாக உள்ளனர்



வியாக்கிழமை பிலிப்பீன் விஜயம்  

ஜனவரி மாதம் 15 ஆம் திகதி   பாப்பரசர் 8.00 மணியளவில் கொழும்பிலிருந்து   கட்டுநாயக்க விமானம் நிலையத்தை சென்றடைவார். அங்கிருந்து 9.00 மணியளவில்  பிலிப்பின் நாட்டுக்கு   பாப்பரசர்  பயணிப்பார். 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top