0
ஸ்ரீலங்கா லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க அந்தக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். 

இன்று மாலை இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

இதில் ஜனக பண்டார தென்னக்கோன், ரெஜினோல்ட் குரே, சரத் அமுனுகம, அதாவுதா செனவிரத்ன, எஸ்.பி நாவின்ன, தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதேவேளை துமிந்த திஸாநாயக்கவை கட்சியின் செயலாளராகவும் ஜனக பண்டார தென்னக்கோன் தேசிய அமைப்பாளராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் ஶ்ரீ சுதந்திரக் கட்சி யாப்பின் படி, கட்சியில் உள்ள ஒருவர் ஜனாதிபதியானால் தலைவர் பதவி அவரையே சென்றடையும் எனவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவ்வாறே கட்சிப் பதவி சென்றடைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதேவேளை ஶ்ரீ சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே என 42 மத்திய குழு உறுப்பினர்கள் மீள உறுதி செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார். 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top