ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட இரு நூற்றுக்கும் மேற்பட்டோரின் பைல்களையும் ஒப்படைத்ததுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் இன்று ரஞ்சன் ராமநாயக்க எம்.பி. முறைப்பாடு செய்தார்.
இதற்கமைய நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அவர்களது கடவுச் சீட்டுக்களை இரத்து செய்ய வேண்டும் எனவும் இதன் போது அவர் கோரினார்.
குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எனினும் இதனை இவ்வரசு நிறைவேற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை ஜனாதிபதியை கஷ்டத்திற்கு உள்ளாக்க இவ்வாறு செயற்படவில்லை.
மக்களுக்கு இவ்வரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் ரஞ்சன் ராமநாயக்க அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
Post a Comment