0
(த.லோகதக்சன்)

வாழைச்சேனை கடதாசி ஆலையின் விடுதிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் உலர் உணவுப் பொதிகளும் பாடசாலைப் பை மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் படம் பொறிக்கப்பட்ட அப்பியாசக் கொப்பிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் மூன்று விடுதிகளில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது மக்களுக்காக வழங்குவதற்கு கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் என்வற்றை பொலிஸார் நேற்று கண்டு பிடித்துள்ளனர்.

கடதாசி ஆலையின் விடுதிகளில் தேர்தல் காலத்தின் போது வந்த உலர் உணவுப் பொதிகள் இருப்பதாக வாழைச்சேனை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹுஸைனின் பணிப்புரைக்கமைவாக விடுதிகள் ஆலையின் அதிகாரிகள் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் திறந்து பார்வையிட்ட போதே இப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதிகளுக்கு வாழைச்சேனை பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற அதிகாரிகளின் உதவியுடன் பொருட்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும், அதுவரை வாழைச்சேனை பொலிஸாரின் பாதுகாப்பிலயே குறித்த மூன்று விடுதிகளும் இருக்கும் என்றும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top