கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகருமான அஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
ஒஸ்டின் பெர்னாண்டோ, 2002 - 2004 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பணியாற்றிய மொஹான் விக்கிரமசிங்க பதவி விலகியபின்னர், அந்த வெற்றிடத்துக்கு எஸ்.எஸ்.பி. மஜீதை நியமிப்பதற்கு முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், இவரை நியமிக்க வேண்டாமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒரு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரே மீண்டும் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அஷ்ரப் ஏ. சமத்)
(அஷ்ரப் ஏ. சமத்)
Güzel paylaşım teşekkürler SEO
ReplyDelete