மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் பொதி செய்யப்பட்ட நிலையில், வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்ட 100 உலருணவுப் பொதிகளை புதன்கிழமை (14) அதிகாலை தாம் கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பொதிகளில் அரிசி, பருப்பு, பால்மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் உலருணவுப் பொதிகளை விநியோகித்திருந்தன. அவ்வாறு மக்களுக்கு விநியோகிப்பதற்காக கொண்டுவரப்பட்ட உலருணவுப் பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை கீளேயுள்ள Comment Box இல் அருமையாக பதிவுசெய்யுங்கள்.
இங்கு பார்வையாளர்களால் COMMENT செய்யப்படும் கருத்துக்களுக்கு BATTIFM பொறுப்பல்ல
Post a Comment