அரசியல் சீர்திருத்தத்தை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய நிறைவேற்றுப்பேரவை வாரத்தில் ஒருமுறை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
100 நாட்கள் வேலைத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பேரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கூடிய போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரவையில், பாராளுமன்றத்தினை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த பேரவை கடந்த 12ஆம் திகதியே நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனினும், நேற்றைய தினமே இந்த பேரவை நிறுவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த சபையின் அங்கத்தவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வண. சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சம்பந்தன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், சரத் பொன்சேகா, அனுரகுமார திசாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment