கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட சித்தாண்டி விநாயகர் கிராமம் அலைமகள் பாடசாலையில் இன்று திங்கள் கிழமை (19) முதலாம் தரற்திற்காக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் பூபாலப்பிள்ளை சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில், பாடசாலைக்கு முதலாவதாக காலடியெடுத்து வருகைதந்த மாணவர்களுக்கு பாடசாலையின் சிரேஸ்ட மாணவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மிகவும் உச்சாகமாக கைகளைத்தட்டி வரவேற்றதுடன் மாணவர்களின் கைகளில் பலூண்களையும் கொடுத்து வரவேற்றதைக் காணக்கூடியதாகயிருந்தது.
இவ் நிகழ்வில் கல்குடா கல்வி வலயப் பிரதிக் கல்வி பணிப்பாளர் (கல்விமுகாமைத்துவம்) தினகரன் ரவி,கல்குடா கல்வி வலய ஆரம்ப கல்விப் இணைப்பாளர் யோகராசா, கல்குடா கல்வி வலய விசேட கல்வி ஆசிரிய ஆலோகர் சிவராசா, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய அதிபர் பகிதரன், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
வரவேற்க்கபட்ட மாணவர்களை புதிய வகுப்பறைக்குள் அழைத்துச் செல்வதையும், மாணவர்களின் வகுப்பு ஆசிரியர்களினால் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்படுவதையும், வருகைதந்த அதிதிகள் மாணவர்களுடன் கலந்தரையாடுவதையும் படங்களில் காணலாம்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை மாணவர்களின் வரவு 59 ஆக அதிகரித்துள்ளதென பாடசாலையின் அதிபர் சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
2015ம் ஆண்டுக்கான, முதலாம் தரத்தில் கல்விகற்கும் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நிகழ்வு நாடுமுழுவதும் இன்று உத்தியபூர்வமாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment