தைத்திருநாளைச் சிறப்பித்து மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம் நடாத்தும் “குடும்பத்தில் பாரம்பரியம் பேணப்படுகின்றது - மீறப்படுகின்றது” என்ற தலைப்பிலான நகைச்சுவைப் பட்டி மன்றம் ஒன்று கடந்த 18.01.2015 ஆம் திகதி மாலை மட் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் கதிரவன் த.இன்பராசாவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் கலாபூசணம் செ.எதிர்மன்னசிங்கம் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாகாணசபை உறுப்பினர்களான கவிஞரும் (அண்ணாதாசன்) சட்டத்தரணியுமான துரைராசசிங்கம் மற்றும் கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) ஆகியோருடன் மட்டக்களப்பு தமிழ்ச் சங்க பிரதிநிதிகள் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பொது மக்களென பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அன்பளகன் குரூஸ் தலமையில் நடைபெற்ற குறித்த நகைச்சுவைப் பட்டிமன்றத்தில் குடும்பத்தில் பாரம்பரியம் பேணப்படுகின்றது என மூன்றுபேரும் மீறப்படுகின்றது என மூன்றுபேருமாக அறுவர் கலந்துகொண்டு தங்களது வாதப் பிரதிவாதங்களை முன்னிறுத்தி வாதிட்டனர்.
Post a Comment