0
மடு அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதத்தை திருத்தந்தை சற்றுமுன் 4.20 மணியளவில் வழங்கியிருக்கின்றார்.
அப்போஸ்தலிக்க திருப்பயணத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் இன்று மடுவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றார்.
உலங்கு வானூர்தி மூலம் மடுவை சென்றடைந்த திருத்தந்தைக்கு அங்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்ட்டிருக்கின்றது.

திருச்சிலுவை அடையாளத்துடன் மரியன்னையின் விசேட ஆராதனையினை ஆரம்பித்த திருத்தந்தை மாலை 4.20 மணியளவில் தீருச் சொரூப ஆசிர்வாதத்தை வழங்கியிருக்கின்றார்.
திருத்தந்தையின் மடுவிற்கான விஜயத்தின் ஞாபகார்த்தமாக மன்னார் மறைமாவட்டம் சார்பாக திருத்தந்தை அவர்களுக்கு மரத்தினால் செதுக்கப்பட்ட மடு அன்னையின் திருச்சொரூhம் ஒன்று வங்கப்பட்டது.
மடு திருத்தலத்தின் பாரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை அடிகளாரால் இது திருத்தந்தையிடம் கையளிக்கப்பட்டது.



இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை கீளேயுள்ள Comment Box இல் அருமையாக பதிவுசெய்யுங்கள்.



இங்கு பார்வையாளர்களால் COMMENT செய்யப்படும் கருத்துக்களுக்கு BATTIFM பொறுப்பல்ல


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top