(வி.சுதர்சன்)
மட்டக்களப்பு கருவப்பங்கேனி பிரதேசத்த்தில் நீர் நிரம்பிய தனியார் காணி ஒன்றில் முதலைகள் நடமாடுவதாக அறியக்கிடைக்கின்றது.
சுமார் 5-6 அடி நீளமுடாய 4 முதலைகள் இங்கு நடமாடுவதாக கிராமவாசிகள் குறிப்பிடுகின்றனர். சுமார் 2 ஏக்கர் மதிக்கத்தக்க இந்த தனியார் காணி வெள்ள நீரினால் சூழப்பட்டு இருகின்றது.
மட்டக்களப்பு முகத்துவாரம் வாவியில் இருந்து இந்த முதலைகள் வந்திருக்க கூடும் என கிராமவாசிகள் குறிப்பிடுகின்றனர். இந்த முதலைகள் உணவுக்காக தமது செல்ல பிராணிகளையும் பிடித்த்து செல்வதாகவும், இரவு நேரங்களில் தமக்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கிராமவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை கீளேயுள்ள Comment Box இல் அருமையாக பதிவுசெய்யுங்கள்.
இங்கு பார்வையாளர்களால் COMMENT செய்யப்படும் கருத்துக்களுக்கு BATTIFM பொறுப்பல்ல
Post a Comment