0
(காரைதீவு நிருபர்)
 
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூhரியில் இம்முறை க.பொ.த.உயர்தரப் பரீட்சைப்பெறுபேற்றின் பிரகாரம் 41 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என கல்லூரி அதிபர் திரு.வித்யாராஜன்தெரிவித்தார்.

செல்வி சிறிஸ்கந்தராஜா தனுசியா 3ஏ (கலை) செல்வி யோகன் பபிதா 2ஏபி (மருத்துவம்) செல்வி நாகேந்திரம் நிவேசாந்தினி 2பிசி(பொறியியல்) ஆகியோருடன் கலைப்பிரிவில் புவனேந்திரன் சிந்துஜா 2ஏபி தட்சிதானந்தம் பிரசாந்தினி 2ஏபி ஜெகநாதன் ஜெகருபன் 2ஏசி திருமேனி கிசானிகா 2ஏசி சந்திரமோகன் சரண்யா 2ஏஎஸ் சித்திகளை முன்னணியில் பெற்றுள்ளனர்.

மேலும் பல மாணவர்கள் நல்ல சித்திகளைப்பெற்றுள்ளனர்.

மொத்தத்தில் உயிரியல் பிரிவில் 29மாணவர்களும் கணிதப்பிரிவில் 19 மாணவர்களும் கலைப்பிரிவில் 59மாணவர்களும் வர்த்தகப்பிரிவில் 02 மாணவர்களும் பல்கலைக்குத் தகுதிபெற்றுள்ளனர். இத்தொகை தோற்றிய மாணவர்களுள் 61வீதமாகும்.
இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டுவதாக கல்லூரி அதிபர் திரு.வித்யாராஜன்தெரிவித்தார்.

மாகாணப்போட்டியில் ஹிந்துஜன் முதலிடம்!

அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தரம் 11ஜச்சேர்ந்த விபுலானந்தா மாணவன் குலேந்திரன் ஹிந்துஜன் முதலாமிடத்தைப்பெற்றுள்ளாரென கல்லூரி அதிபர் திரு.வித்யாராஜன் மேலும் தெரிவித்தார்.
 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top