மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி தெற்கு கிராமசேவகர் பிரிவில் கடந்த 2012 ஆம் ஆண்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் “கமநெகும” கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்ட ஜோதி சனசமூக நிலையம் இதுவரையில் பாவனைக்கு உட்படுத்தப்படாமல் தொடர்ச்சியாக மூடப்பட்ட நிலையில் புற்கள் வளர்ந்து உள்ளதாக இக் கட்டிடத்தினை சு10ழவுள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பல காலமாக இக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பழைய சனசமூக நிலையக் கட்டிடம் இருந்ததாகவும் இக் கட்டிடத்தைச்சுழவுள்ள வர்த்தகர்களால் பத்திரிகைகள் கொள்வனவு செய்யப்பட்டு வாசிகசாலையாக இயங்கியதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நவீன முறையில் புணரமைக்கப்பட்டுள்ள இக் கட்டிடத்திற்கு மின்சார வசதிகளை ஏற்படுத்தி வாசிகசாலையாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இதனைச் சு10ழவுள்ள சந்தை வியாபாரிகள் மற்றும் பொமக்களின் பணன்பாட்டிற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என பொதுமக்களால் சுட்டிக்காட்டடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment