0
(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான மதுரங்குளம், குஞ்சன்குளம் ஆகிய கிராம மக்களுக்கு சுவிஸ் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் அவுஸ்ரேலியா மனிதநேய அன்பர்கள் மூலம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக (14) புதன்கிழமை உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கப்பட்ட உதவிப்; பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.

இப் உணவுப் பொதியில் அரிசி, சீனி, தேயிலை, கோதுமை மா, பருப்பு உட்பட்ட பொருட்களை அடங்கியதாக 205 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்காக சுவிஸ் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் வழங்கிய 68,000 ரூபாய் நிதி உதவியை 97 குடும்பங்களுக்கும், அவுஸ்ரேலியா மனிதநேய அன்பர்கள் வழங்கிய 80,000 ரூபாய் நிதி உதவியை 105 குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமாக காணப்படும் மதுரங்குளம், குஞ்சன்குளம் கிராம மக்களுக்கு இவ்உதவியை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை சுவிஸ் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் அவுஸ்ரேலியா மனிதநேய உணர்வு கொண்ட உறவுகளுக்கு நன்றியை தெரிவிக்கின்றனர். அத்தோடு இவ் உதவியை பெற்ற மக்களும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

வெள்ளத்தால் தமது சேனைப் பயிர்ச் செய்கை உட்பட தொழில் பாதிப்பை பெரிதும் எதிர்கொண்ட மக்கள் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு உதவி வழங்கப்பட்டதை இட்டு மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.














Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top