0
நன்றிக் கடனுக்காக உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டாம் - ஜேர்மனி வாழ் தாயக உறவுகளின் வெள்ள நிவாரன உதவி வழங்கும் நிகழ்வில் பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர்.

தமிழ் மக்கள் தங்களுக்கு உதவிகளை வளங்கியவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டாம். என தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரியநேத்திரன்.

அன்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட் அரசடித்தீவைச் சேர்ந்த  குடும்பங்களின் பாடசாலை செல்கின்ற வறிய மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திரு.பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு தெரிவிக்கையில்

உரிமை என்பது வேறு சலுகை என்பது வேறு. சலுகைகளுக்காக உரிமையை விட்டுக்கொடுப்போமாக இருந்தால் அது எமது இனத்தின் இருப்பையே அழித்துவிடும்.
எனவே உதவிகளை யார் (தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட) வழங்கினாலும் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள் ஆனால் அந்த உதவிக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக ஒரு போதும் உங்களின் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டாம்.


நன்றிக் கடனுக்காக மாலை போடுங்கள்! ஆராத்தி எடுங்கள!; ஏன் சாப்பாடும் கூட போடுங்கள் ஆனால் உங்களின் உரிமையை அதற்காக வழங்க வேண்டாம்.

உங்களது வாக்குரிமை எப்போதுமே எமது இனத்தின் விடிவிற்காக, விடுதலைக்காக அதன்பால் செயற்படுகின்ற, அதற்காக போராடுகின்ற கட்சிக்கு வலுச் சேர்ப்பவையாக அமைவதனை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எனது இனம் விடுதலையை நோக்கிய பயணத்தினை தொடர்ந்தும் மேற்கொள் முடியும்.
அன்மையில்  நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நீங்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னால் நின்று தமிழ் தேசிய போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்த்தீர்கள் இதற்காக நான் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதே போன்று நடைபெற இருக்கின்ற எதிர்வரும் தேர்தல்களிலும் நீங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நின்று எமது இலக்கான தமிழ் தேசிய விடுதலையை அடைவதற்கு அயராது பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் அன்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இந்த கற்கை உபகரணங்களுக்கான நிதி உதவிகளை வழங்கிய  ஜேர்மனியில் வசிக்கின்ற தாயக உறவுகளுக்கும்; இந்த உதவித் திட்டத்தினை இங்கு செயற்படுத்துவதற்கு உறுதுணை வழங்கிய உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பிற்கும் அதன் பணிப்பாளர் திரு ஏ.கங்காதரனுக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் இந்த உதவிகளைப் பெறுகின்ற மாணவர்கள் அனைவரும் கல்வியில் மேம்பட்டு கல்விமான்களாகவும் அறிஞர்களாகவும் உருவாக வேண்டும் என இறைவனை வேண்டுவதுடன் இதற்கு பெற்றோர்களும் தங்களை முழுமையாக அர்ப்பணித்து தங்கள் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கு உறுதுணையாகச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதுடன் தொடர்ந்தும் எதிர்காலத்தில் இதுபோன்ற உதவிகளை பிறரிடமிருந்து எதிர்பாராது சுயமாக முன்னேறுவதற்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மகிவும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top