இம்முறைப்பாடு சனிக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தான் பொதுச் சுகாதார பரிசோதகராக கடமையாற்றிய காலத்தில், தான் இலஞ்சம் பெற்றதாக, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் ஆகிய மூவரும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
அவ்வாறு இலஞ்சம் பெற்றிருப்பின் அதனை நிரூபிக்குமாறும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை ஒன்றை எடுக்குமாறும் கோரியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததால் இதை நிரூபிக்குமாறும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை ஒன்றை எடுக்குமாறும் கோரியே அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் என்றும் தனக்கு நீதியை பெற்றுத்தருமாறும் அவர் தெரிவித்துள்ளார்
.
Post a Comment