0
காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட ஊர்வீதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 650 சட்டவிரோத கட்டடிடங்கள் உடைக்கப்பட்டதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார். 

வீதி விஸ்தரிப்பு பணிகளுக்காகவே குறித்த சட்டவிரோத கட்டிடங்கள் தகர்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

குறித்த சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுமாறு பல தடவைகள் நகரசபையினால் எழுத்து மூல அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும் கட்டிட சொந்தக்காரார்கள் அவற்றை நடைமுறைப்படுத்தாமையினால் நகரசபையினால் இக்கட்டிடங்கள் தகர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top