மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகளுக்கு, வெள்ளிக்கிழமை (16) பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பொலிஸ் நலன்புரி அமைப்பு மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் குடும்ப நலன்புரிச்சங்கம் என்பவற்றினால் இவை வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் 82 மாணவர்களுக்கு, புத்தகப்பை மற்றும் பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.
பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு இவை வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜயசிங்க, மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுரத் ஹக்மன பண்டார உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Home
»
மட்டக்களப்பு
» மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment