0
விக்ரம், எமி ஜாக்ஸன் நடிப்பில் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் ’ஐ’.பொங்கலை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இப்படத்தை தான் இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. படத்திற்கான முன்பதிவுகள் நேற்று ஆரம்பமாகியுள்ளதால் போட்டி போட்டு ’புக்’ செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

ஆனால் இன்னொரு பக்கம் ,வெளிநாடுகளில் ‘ஐ’ படத்தின் திருட்டு விசிடி தயாரிக்கும் வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறது.  நமக்கு பக்கத்து நாடான இலங்கையில் உள்ள ஒரு கடையில் ஐ படத்தின் திருட்டு விசிடியை அடுக்கி வைத்துள்ளார்கள். தமிழ் மக்களை தவிர்த்து அங்குள்ள சிங்கள மக்களும் வாங்கி பார்க்கக்கூடிய வகையில் சிங்கள மொழியிலேயே அட்டையை தயார் செய்து விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளுக்கு திரைப்படம் போய் சேரவேண்டும் என்பதற்காக சில நாட்களுக்கு முன்பே படத்தின் பிரதிகள் அனுப்பப்படுவதால், அங்குள்ள திரை அரங்குகள் நமக்கு முன்பே திரைப்படத்தை பார்ப்பதுடன் இவ்வாறான திருட்டு விசிடிக்களையும் தயாரித்து அங்கிருந்து இணையதளத்தினூடாக உலகம் எங்கும் கிடைக்க செய்கின்றார்கள். 

என்ன தான் திருட்டு விசிடி, டிவிடிக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அதை ஒழிப்பது என்பது யானை வாய்க்குள் கை விட்டு குண்டூசியைத் தேடுவது போலத்தான் ஆகி விடுகிறது. அரசாங்கமும் கடுமையான சட்ட திட்டங்களை வகுத்தாலும், உலகம் முழுவதும் இதற்கென பெரிய நெட்வொர்க்கே உள்ளது.




இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை கீளேயுள்ள Comment Box இல் அருமையாக பதிவுசெய்யுங்கள்.


இங்கு பார்வையாளர்களால் COMMENT செய்யப்படும் கருத்துக்களுக்கு BATTIFM பொறுப்பல்ல


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top