0
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் இருந்த கிழக்கு மாகாண சபை தற்போது அரசின் பக்கம் சாய்ந்துள்ளது. ஆட்சி மாற்றம் இடம் பெரும் என பலத்த எதிர்பார்ப்புடன் திங்கள் கூடிய சபை புதிய முதலமைச்ச்சரினால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என கூறி எதிர்வரும் செவ்வாய் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு கேள்வி யார் அடுத்த முதலமைச்சர் என்று.இதைபார்கும் முன் முதலில் கிழக்கு மாகாண சபையின் பதவிகளை பற்றி சற்று நோக்குவோம்.

கிழக்கு மாகாண சபையில் மொத்தம் 7 பதவிகள் உள்ளன.முதலமைச்சர்,தவிசாளர்,நான்கு அமைச்சர்கள்,பிரதி தவிசாளர்.
இதுவரை காலமும் முஸ்லிம் காங்கிரஸ் சுகதாரம்,விவசாய அமைச்சு என இரண்டு பதவிகளையும் சுதந்திரக்கட்சி முதலமைச்சர் தவிசாளர் கல்வி அமைச்சர் என மூன்று பதவிகளையும் தேசிய காங்கிரஸ் வீதி அபிவிருத்தி ரிசாதின் கட்சி பிரதி தவிசாளர் என தலா ஒரு பதவியையும் வைத்திருந்தன.
இதன்படி தற்போது ஆட்சி அமைக்கவிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி ரிசாதின் கட்சி ஆகியன இப்பதவிகளை பங்குபோட பேச்சுவார்த்தை நட்டாத்துகின்றன.இப் பேச்சு வார்த்தையில் ஐக்கிய தேசிய கட்சி.காங்கிரஸ்.கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தலா இரண்டு பதவிகளும் ரிசாதின் கட்சிக்கு ஒரு பதவியும் வழங்கப் பட இணக்கம் காண பட்டதாக தெரிகிறது.

இநிநிலையில் தயா கமகே முதலமைச்சரின் ஆசனத்துக்கு குறி வைப்பதாக தெரிகிறது காரணம் ஏற்கெனவே காங்கிரஸ் ரிசாதின் கட்சிக்கு முடிவெடுக்கப் பட்ட எண்ணிகையில் பதவிகள் உள்ளன.

எஞ்சிய நான்கு பதவிகளில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் கூட்டமைப்புக்கும் தலா இரண்டு பதவிகள் செல்லும்.அந்த வகையில் தற்போது வெற்றிடமாக உள்ளவை முதலமைச்சர்.கல்வி,வீதி அபிவிருத்தி அமைச்சர் தவிசாளர் பதவிகளாகும்.

இதனால் முதலமைச்சரையும் வீதி அமைச்சரையும் ஐ.தே.க வைத்து கொண்டு கல்வி.தவிசாளரை கூட்டமைப்புக்கு கொடுக்கலாம் என்று கணக்கு போட்டுள்ளார்..இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு வரும் முதலமைச்சரை தான் கைப்பற்றலாம் என நினைத்திருக்கிறார்.

ஆனால் கூட்டமைப்பு தமிழ் பேசும் ஒருவரையே நியமிக்க வேண்டும் என விடாப்பிடியாய் உள்ளது காங்கிரசும் முதலமைச்சர் பதவி மேல் குறி வைத்துள்ளது.ரிசாதின் கட்சியும் அமைச்சு பதவியொன்றை கேட்டுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் இதுவரை காலமும் முஸ்லிம் இனத்தவர் ஒருவர் முதலமைச்சராக இருந்தமையும் சிங்களவர் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்ய சம்மதிக்காமையும் இதற்கான காரணங்களாகும். இது தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக ஆசனங்கள் (11) காணப்படுவதனால் த.தே.கூ முன்னர் போன்று முற்று முழுதாக முஸ்லிம் காங்கிரசிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலைமை இருக்காது

யாருக்கு என்ன பதவி கிழக்கின் அடுத்த முதல்வர் யார் என்று இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தெரிந்துவிடும்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top