0
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் சசிதரன் ஒரு நகைச்சுவையாளர் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட விசேட பொறுப்பாளர் செங்கலடி க.மோகன் தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வேலைத்திட்டங்கள் கட்சி புனரமைப்பு நடவடிக்கைக்கான விசேட பொறுப்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடம் என்னை நியமித்துள்ளது. முழுநாடே பார்க்க பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி சேவையூடாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதம மந்திரியுமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே என்னை கட்சியின் இணைத்துக் கொண்டார்.

இதன் பிரகாரம் மாவட்டத்தின் வேலைத்திட்டங்கள் கட்சி புனரமைப்பு மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் என்பன பற்றி நாம் தீவிரமாக செயற்பட்டு வருகினறோம். 

17.02.2014ம் திகதியன்று முழு நாடே பார்க்க என்னை கட்சியில் சேர்த்துக்கொண்டு மாவட்ட வேலைத்திட்டங்களில் முழு பொறுப்பாளராக செயற்பட்டுவரும் வேளையில் இவ்வளவு காலமும் உறக்கத்திலிருந்து விட்டு நேற்றதான் உறக்கம் தெளிந்து, கட்சியில் செங்கலடி மோகனை சேர்க்க கூடாது என்ற கூற்று நகைச்சுவையானது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கடும் அச்சுறுத்தலுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தனித்து நின்று தற்போதைய கௌரவ ஜனாதிபதி அவர்களையும் கௌரவ பிரதம மந்திரி அவர்களையும் மட்டக்களப்பிற்கு அழைத்து வந்து கூட்டத்தை நடத்தியிருந்தோம். குறுகிய காலத்தினுள் கிராமம் கிராமமாக பிரச்சாரங்களை நடாத்தியிருந்தோம். 

மட்டக்களப்பு மாவட்ட முழு பொறுப்பாளர் என்ற வகையிலே பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா ஆகிய தொகுதிகளை எனதுநேரடி கட்டுப்பாட்டில் வழிநாடத்தியிருந்தேன். முகிந்த குழுவினரின் பயத்தால் பட்டப்பகலிலே கதவினையும் யன்னல்களையும் பூட்டி நுளம்புத்திரியையும் வைத்து தூங்கிவிட்டு இப்போது தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வீராப்பு பேசுவது எவ்விதத்தில் நியாயமானது. 

நானாக கட்சிக்கு தேடிப் போகவுமில்லை நானாக இப்பதவியை கேட்டு வாங்கவுமில்லை. என்னை கட்சிக்கு சேர்த்துக் கொண்ட விடயம் முழு நாட்டு மக்களும் அறிந்து கொண்ட நிலையில் தூங்கிக் கிடந்த தொகுதி அமைப்பாளரின் அறிக்கை கவலையையையும் வருத்தத்தையும் தரக்கூடியது. இது போன்ற அறிக்கைகளை விட்டு சசிதரன் தன்னை ஒரு நகைச்சுவையாளராக மாற்றிக் கொள்ள வேண்டாம் என்று அறியத்தருகின்றேன். 

ஐக்கிய தேசியக் கட்சியில் எனது பிரவேசம் சசிதரனின் இருப்பை கேள்விக்குறியாகியுள்ளது. அவரது பயம் அவரைப் பொறுத்தவரை அவருக்கு நியாயமானதாக இருக்கலாம். அதற்காக முரண்பட்ட கருத்துகளை விட்டு மக்களை குழப்ப வேண்டாம் என க.மோகன் தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top