ஜேவிபி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கூறியதுபோல் இன்றைய தினம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜேவிபியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல உள்ளிட்ட குழுவினர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ரோஹித்த அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாமல் ராஜபக்ஷவின் கார்ல்டன் சுப்பர் ஸ்போட்ஸ் நிறுவன சுற்றுலா சபையின் தலைவர் சேனங்க குணரத்ன, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜெனிபர், தேசிய லொத்தர் சபையின் தலைவர் மற்றும் முன்னாள் சமுர்த்தி பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக ஜேவிபி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் அரச சொத்துக்களை வீணாக பயன்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜேவிபி பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊழல்களில் ஈடுபட்ட பலர் குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஏனையோரை வெளிநாடு செல்லாது தடுக்கும் நோக்கில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை கீளேயுள்ள Comment Box இல் அருமையாக பதிவுசெய்யுங்கள்.
இங்கு பார்வையாளர்களால் COMMENT செய்யப்படும் கருத்துக்களுக்கு BATTIFM பொறுப்பல்ல
Post a Comment