பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு மகா வித்தியாலயத்தில் இன்று (19.01.2015) திங்கட்கிழமை காலை 09.30 மணியளவில் மணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் கி.லோகநாதன் தலைமையில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் தரம் 2 மாணவர்களால் புதிதாக தரம் ஒன்று மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது.
தரம் 1 வகுப்பாசிரியை திருமதி ப.யோகநாதன் ஆசிரியையால் வரவேற்புரையும், அதிபர் கி.லோகநாதனினால் தலைமையுரையும் இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், மாணவர்களுக்காண சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
Post a Comment