0

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். 

இன்று (12) காலை மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

மஹரகம - வத்தேகெதர பிரதேசத்தில் வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

அதன்போது 28 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top