(சுழற்சி & ஏ.எரிக்)
கிழக்கு மாகாணத்திருந்து மருத்துவம், பொறியியல், போன்ற துறைகளுக்கு பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான 2ம் வருட புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் மாலை மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.
இலங்கை இணுவிலைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் குடும்பத்தினரால் இப்புலமைப் பரிசில் மாதாந்தம் குறிப்பிட்ட பயிற்சி நெறி முடியும் வரை வழங்கப்படும். மருத்துவத்திற்கு மாதம் ரூபா 8000.00, பொறியிலிற்கு மாதம் ரூபா 7000.00 வீதமும்; வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர், எஸ்.மனோகரன், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்ப மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன், மட்டக்களப்ப மேற்கு வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஹரிகரராஜ், லண்டன் சிவன்கோயில் பொருளாளர் எஸ்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் , ஈச்சிலம்பற்று கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.லோகராஜா, மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத் தலைவர் தேவசிங்கம், மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,கலந்துகொண்டனர்.
இதன்போது புலமைப்பரிசில்கள் செல்வி அனோஜா குணசேகரம் - கரையாக்கன்தீவு மருத்துவம், பாலசுப்ரமணியம் சுரேந்தர் – தம்பலகாமம் தேற்றாத்தீவு பொறியியல், செல்வி தர்சிகா லோகநாதன் - மட்டக்களப்பு பொறியியல், யோகேஸ்வரன் சசிகாந் - தேற்றாத்தீவு பொறியியல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அதே போன்று கடந்த வருடம், மருத்துவ பீடத்துக்குத் தெரிவான 2 பேருக்கும், பொறியியல் துறைக்குத் தெரிவான 2 பேருக்கும், பூகோளவியல் விஞ்ஞானத்துறை மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளுக்குத் தெரிவான தலா ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருந்தது.
இப்புலமைப் பரிசில்களை லண்டனை வசிப்பிடமாகவும் வேலணை யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கொண்ட நிர்மலன் குடும்பத்தினரால் வழங்கப்பட்டிருந்தது.
Post a Comment