0
(வி.ரி.சகாதேவராஜா)



இன்றைய தைப்பொங்கல் தினத்தன்று காரைதீவில் உள்ளக விளையாட்டரங்கை நிருமாணிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


காரைதீவின் வரலாற்றில்  முதன்முறையாக நிருமாணிக்கப்படவிருக்கும் இவ் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கும் பணியில் காரைதீவு விளையாட்டுக்கழகம் ஈடுபட்டுள்ளது என்று கழகச்செயலாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன்; தெரிவித்தார். 

அதற்கான அதிஸ்ட லாபச் சீட்டிழுப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 15ஆம் திகதி வியாழனன்று கழகத் தலைமையகத்தில் கழகத்தலைவர் வெற்றிவேல் அருட்குமரன் தலைமையில் நடைபெற்றது.


நீண்டகாலமாக காரைதீவில் இல்லாதிருந்த உள்ளகவிளையாட்டரங்கின் அவசியத்தை வலியுறுத்தி அதனை  நிருமாணிப்பதற்கான முன்மொழிவை  கடந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் தலைவர் யு.ரஜிநாதன் முன்வைத்திருந்தார். அதேகூட்டத்தில் அதற்காக ஒரு விசேட செயலணியொன்றும் நிறுவப்பட்டது.


அதற்கான நிதிதேடல் செற்பாட்டின் ஓரங்கமாக அதிஸ்டலாச்சீட்டிழுப்பை நடாத்துவதென்றும் அதனை தைப்பொங்கலில் அங்குரார்ப்பணம்செய்து கழகம் வருடாந்தம் நடாத்திவரும்; சித்திரைப்புத்தாண்டு கலசார விளையாட்டுவிழாவில் இறுதிச்சீட்டிழுப்பை நடாத்துவதென்றும் முடிவானது.

அதற்கமைவாக இன்று அதிஸ்டலாபச்சீட்டு விநியோக அங்குரார்ப்பணநிகழ்வு நடைபெற்றது. இவ்வுள்ளக விளையாட்டரங்கு கே.எஸ்.ஸி.தலைமையகம் அமைந்துள்ள வளாகத்தில் நிருமாணிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top