0
(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான கிரிமிச்சையோடை கிராம மக்களுக்கு லண்டன் செல்வ விநாயகர் ஆலயத்தின் நிதி உதவி மூலம் மட்டு.இந்து இளைஞர் பேரவை ஊடாக இன்று உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று இப்பொருட்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப் உணவுப் பொதியில் அரிசி, சீனி, தேயிலை, கோதுமை மா, பருப்பு உட்பட்ட பொருட்களை அடங்கியதாக 90 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமாக காணப்படும் கிரிமிச்சையோடை கிராம மக்களுக்கு இவ்உதவியை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை லண்டன் செல்வ விநாயகர் ஆலய நிர்வாகத்தினருக்கு நன்றியை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இவ் உதவியை பெற்ற மக்களும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.







Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top