(ஏ.எரிக் & ராகுல்)
அண்மைக்காலமாக மட்டக்களப்பில் குறுந்திரைப்பட கலைஞர்கள் அதிகரித்து தமது நினைவலைகளை கதைகளாக சித்தரித்து பல குறுந்திரைப்படங்கள் வெளியாகியதும், அவற்றுள் சில தேசிய ரீதியில் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகண்ட சரித்திரமும் உண்டு.
அந்த வகையில் ''ஏன் இந்த இடைவெளி'' எனும் குறுந்திரைப்படம் camitus film குழுவினரின் இயக்கத்தில் உருவாகி அதன் வெளியீட்டு விழா நிகழ்வு நேற்றைய தினம் (18) ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரபல ஆசிரியர் அமல் மற்றும் இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.அருட்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் , இக் குறுந்திரைப்பட கலைஞர்கள் இன்னும் எவ்வாறாக தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பவை தொடர்பாகவும் உரையாற்றினர்.
இதன்போது குறுந்திரைப்பட இறுவட்டின் முதற் பிரதிகள் திரைப்பட குழுவினரால் பிரதம அதிதி மற்றும் ஏனைய அதிதிகளுக்கும் வழங்கி வெளியிட்டுவைக்கப்பட்டது.
Post a Comment