இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயம் இடம்பெறுமானால் 1987ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு மேற்கொண்ட அரசமுறை விஜயத்தின் பின்னர் முதல் அரசுமுறை விஜயமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி இலங்கைக்கு வரும் தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கல சமரவீர புதுடில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இலங்கை இந்திய கூட்டு ஆணைக்குழு அமர்வுக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரியில் இலங்கைக்கு வருகிறார்.
இதேவேளை போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த மங்கல சமரவீர, இது தொடர்பில் உள்நாட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
18வது அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்வதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து தமிழர்களின் நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்படவுள்ளன. இதனை வழங்குவதற்கு 13வது அரசியலமைப்பு அவசியப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Home
»
» Unlabelled
» மார்ச் மாதம் இலங்கை வருகிறார் மோடி :1987 இற்கு பின்னர் விஜயம் செய்யும் முதல் பிரதமர்
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment