0
(மன்மதன்)

சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் மீள் இணக்கப்பாட்டிற்குமான மத்திய நிலையம் அதனுடைய மட்டக்களப்பு கிளையாகிய பல்சமய கருத்தாடல் நிலையத்தின் செயற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று முன்தினம் (17) நடைபெற்றது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் மீள் இணக்கப்பாட்டிற்குமான மத்திய நிலையத்தின் ஸ்தாபகரான களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஜயந்த செனவிரெட்ன கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மகிழ்ச்சியானாதும் ஒற்றுமையானதுமான  ஒரு சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டுவரும் இந்நிறுவனத்தின் கடந்து வந்த அடைவுகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான கருத்துரைகள் நான்கு மதங்களிளுமிருந்து வருகைதந்திருந்த வணக்கத்திற்குரிய கோனகல தேரர், இந்து சமய விற்பன்னர் விஸ்வப் பிரம்மஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள், மௌலவி எம்.சீ.எம்.  ரிஸ்வான், யேசுசபைத் துறவி அருட்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டது.

இதன்போது அனைத்து  மதம்களின் கலாசாரத்தினையும் வெளிக்காட்டும் வகையில் சிறார்களினால் கண்கவர் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டமையும், அனைத்து மதங்களைச் சார்ந்த மக்கள் இதன்போது ஆர்வத்துடன் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது.








































Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top