அண்மைக்காலமாக வீதிகளில் கட்டாக்களிகளின் தொல்லை அதிகரித்து வீதி விபத்துக்களும், பல்வேறு பட்ட நோய்களும் மக்களை பாரிய அசெளவ்கரியத்திற்கு உள்ளக்கியமை யாரும் அறிந்தவிடயமாகும்.
அதற்கமைவாக மட்டக்களப்பு கல்லடி வேலூர் கிராமசேவகர் பிரிவில் இன்று 20.01.2015 சமூக சுகாதார நலன் கருதி கட்டாகாலி நாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்களுக்கான இனப்பெருக்கத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிகழ்வானது கல்லடி வேலூர் கிராமசேவகர் காரியாலயத்தில் இப்பகுதியின் கிராமசேவகர் ரீ.சிவலிங்கத்தின் ஒத்துழைப்புடன் சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் , பொதுச்சுகாதார உத்தியோகத்தரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
இன்றைய நாளில் பெரும் எண்ணிக்கையான நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment