20 வருடங்களின் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டமானது அமைச்சரோ, பிரதி அமைச்சரோ இன்றி வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் தற்போது கொண்டுள்ளது.
கடைசியாக 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தில் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருந்தது. இதன் பின்னர் 1994, 2000, 2001, 2004, 2010 ஆகிய காலப்பகுதிகளில் இருந்த அரசாங்கங்களில் தொடர்ச்சியாக பிரதி அமைச்சர்கள் இருந்துவந்தனர்.
கடைசியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் முதன்முறையாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சும் இந்த மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. கடந்த காலங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பலரை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு விளங்கியபோதிலும்,
இன்று ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அமைச்சர் ஒருவர் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இன்றைய நிலையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளில் தலா ஒரு நாடாளுமன்ற உறுப்பினருமாக ஐந்து பேர் உள்ளனர். இதேநேரம்,
இரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். (எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன்) கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களான அம்பாறையில் ஒரு பிரதியமைச்சரும் (திருமதி அனோமா கமகே) திருகோணமலையில்; ஓர் அமைச்சரவை அமைச்சரும் (எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன) நியமிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு பிரதி அமைச்சரேனும் நியமிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளருக்கு இலங்கையில்; மிகவும் அதிகூடிய வாக்குகளான 81.8 சதவீத வாக்குகளை அளித்த மாவட்டமாக மட்டக்களப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment