எதிர்வரும் 14 ஆம் திகதி காலி முகத்திடலில் பரிசுத்த பாப்பரசர் பங்குபற்றும் விசேட ஆராதனையில் கலந்துகொள்ளும் பக்தர்களின் நலன்கருதி விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாளை முதல் இந்த ரயில் சேவைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய காலி முகத்திடலுக்கு வருகைதரவுள்ள பக்தர்களின் நலன்கருதி 11 விசேட ரயில்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பண்டாரவளை, கண்டி, குருநாகல், புத்தளம், சிலாபம், மாத்தறை, காலி மற்றும் அளுத்கம ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு வரை இந்த ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Post a Comment