சென்னையில் உலக சாதனைக்காக 400 அடி நீளம் கொண்ட உலகின் நீண்ட திருக்குறள் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாளை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக உலகின் மிக நீண்ட திருக்குறள் பதிப்பு சென்னை மெரீனா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே வெளியிடப்பட்டது.
133 அதிகாரங்கள் அடங்கிய 1330 திருக்குறளும் 400 அடி நீளமுள்ள நெகிழிப் பதாகையில் அச்சிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இம்முயற்சி இதுவரை யாரும் செய்யாத முயற்சியாகும். திருவள்ளுவர் நாளில் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு திருக்குறளுக்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழ் மக்கள் வள்ளுவர் நாளை கொண்டாடும் விதமாக இனிப்புகள் பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் திருக்குறள் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டு கற்பிக்கப்படுதல் வேண்டும். திருவள்ளுவருக்கு தமிழில் நாணயங்கள் அஞ்சல் தலைகள் வெளியிட வேண்டும். பாராளுமன்றத்தில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும்.
இந்திய அரசு திருக்குறள் காட்டிய நெறிப்படி ஆட்சி நடத்தி வள்ளுவர் வகுத்த மொழி இன சமத்துவத்தை பேணும் மக்களாட்சியை வழங்க வேண்டும். இதை கருத்தில் வைத்தே இச்சாதனை முயற்சியை தமிழர் பண்பாட்டு நடுவமும், தமிழ் ஆன்றோர் அவையும் இணைந்து முன்னெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment