வந்தாறுமூலை பிரசேத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவரின் சடலமொன்று நேற்று (20) திங்கள் கிழமை பிற்பகல் மீட்க்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை நடுவில்தம்பி வீதியிலுள்ள சுப்பிரமணியம் நாராயணப்பிள்ளை (வயது 64) என்பரே தனது மகளுடைய வீட்டு சுவாமியறைக்குள் கழுத்தில் நைலோன் கயிறு சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
ஆறு பிள்ளைகளின் தந்தையாகிய குறித்த நபர் தனது மனைவி வெளிநாடு சென்றவேளை அவரின் மகளாகிய வானுமதி வீட்டில்தான் வசிப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கி உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை முடிவடைந்ததும் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்வம் தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment