0
புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து கலாசார அமைச்சர் சுவாமிநாதன் 

தைப்பொங்கலைக் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் எமது நாட்டில் அமைதியும் சமத்துவமும் கருணையும் நிரந்தர சமாதானமும் மலர வேண்டும் என இத் தைத்திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் என புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து கலாசார அமைச்சர் டீ. எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது:

தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் அடிப்படையானது சுதந்திரம், சமத்துவம், இரக்கம் மற்றும் கருணையாகும். ஆகவே, மனக் கசப்புகளை விட்டுவிட்டு குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி தங்களுக்கு மாத்திரமன்றி விலக்கினங் களுக்கும் இரக்கம், கருணை மற்றும் கடன் செலுத்துவது இப்பண்டிகையின் விசேட அம்சமாகும்.

தென் இந்தியர்களின் பாரம்பரியத்தின் பிரகாரம் உருவாகி வரும் தைப்பொங்கல் வைபவம் உலக வாழ் தமிழ் மக்களால் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.தமிழ் பஞ்சாங்கத்தின் பிரகாரம் தை மாத முதல் தினத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இற்றைக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் சோழ மன்னர் ஆட்சி காலத்தில் வருட பிறப்பின் ஆரம்ப ஆறுவடைப் பண்டிகையாக இது ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.
தமது அறுவடையை செழிப்புறச் செய்வதற்காக சகலருக்கும் சமத்துவமாக தூய மனப்பான்மையுடன் செஞ்சோற்றுக் கடன் செலுத்துவது இப்பண்டிகையின் நோக்கமாகும். அதனுடன். தமது அறுவடையை செழிப்புறச் செய்வதற்காக உறுதுணையாய் அமைந்த சூரிய பகவானுக்கு நன்றிக் கடன் செலுத்துவதுடன் தமது விவசாய அறுவடைகளுக்கு ஒத்தா சைகளை பெற்றுக் கொடுத்த இதர உயிரினங்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் பண்டிகை யாகவும் கொண்டாடப் படுகிறது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top