0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று (20) நடைபெறவுள்ளது. 

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட உரையொன்று ஆற்றப்படவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். 

ஏனைய நாட்களைப் போன்று இன்று பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட மாட்டாது. 

கட்சித் தலைவர்கள் அரசியல் சூழ்நிலை மற்றும் தங்களது நிலைப்பாடு குறித்து சிறு விளக்கம் அளிப்பார்கள். 

புதிய சட்ட மூலங்கள் எதுவும் இன்றைய தினம் அமுல்படுத்தப்பட மாட்டாது. 

சபாநாயகர், பிரதி சபாநாயகர் போன்ற பதவிகளில் மாற்றம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். 

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்கவும், அவைத் தலைவராக பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவும், எதிர்க்கட்சியின் தலைவராக நிமால் சிறிபால டி சில்வாவும், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக ஜோன் செனவிரட்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top