0
தொப்பிக்கல் பிரதேச கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தில் திங்கள் கிழமை (19) முதலாம் தரத்திற்காக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் தெ.டினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. 

இவ் நிகழ்வில் பாடசாலைக்கு முதலாவது நாளாக வருகைதந்த மாணவர்களுக்கு பாடசாலையின் சிரேஸ்ட மாணவர்களினால் மலர் மாழை அணிவிக்கப்பட்டதும் பாண்ட் வாத்தியம் முழங்க புதிய மாணவர்களை வரவேற்றனர். 

பாடசாலைக்கு பெற்றோருடன் வருகைதந்த மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்லுமுன் தமது பெற்றோர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு வகுப்பறைக்குள் காலடியெடுத்துவைத்தனர்.
நடைபெற்ற புதிய மாணவர்களை வரவேற்க்கும் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 

நகரில் இருந்து பல கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள வயல் பிரதேச்ததில் குடியேறி வசிக்கும் கிராமங்களிலுள்ள பெரும்பாலான விவசாய குடும்பங்களின் பிள்ளைகள் இப்பாடசாலையில் கல்விகற்றுவருகின்றமை குறிப்படத்தக்கது.

நகர் புறத்தில் இருக்கும் சிறு வசதிகள் கூட மாணவ்hகளுடைய வீடுகள் மற்றும் வயல் குடிசைகளில் இல்லை. காட்டு யானைகளின் தொல்லை, மின்சாரம், சீரான போக்குவரத்து பாதை மற்றும் குடிநீர் என பல்வேறு அடிப்படை வசதிகள் அற்ற நிலையில்; ஈரளக்கும், இலுக்கு, பெருமாவெளி போன்ற பாடசாலைகளில் கற்வியைத் தொடரும் மாணவர் சமூகமும் அத்துடன் பொதுமக்களும். 






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top