0
காத்தான்குடி நகரசபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் நான் மற்றும் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஸெஸீம் உட்பட ஐந்து பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளோம்.
காத்தான்குடி நகரசபை பிரிவில் வீதி பெயர்ப்பலகைகளை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.
தேர்தல் முடிந்த மறுதினமான 9ஆம் திகதி இந்த வீதி பெயர்ப்பலகைகளை சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான காணொளியும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்.
ஏழு வீதி பெயர்ப்பலகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒவ்வொரு பெயர்ப்பலகையும் 7000 ரூபாய் பெறுமதியாகும் என்றார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top