நாட்டின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்காக எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அழைப்பையேற்று அன்னச் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து வரலாறு காணாத வெற்றியினை மைத்திரிபால சிறிசேனவிற்கு பெற்றுக் கொடுத்தமைக்காக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் சார்பில் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான மு.இராஜேஸ்வரன் விடுத்துள்ள நன்றிஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எம்மக்களின் பங்களிப்பினைப்; பெற்று இலங்கை சனநாயகசோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏழாவது ஜனாதிபதியின் வெற்றியில் தமிழ்மக்களும் உரிமையுடன்கூடிய பங்காளர்களாக மாறியிருக்;கின்றோம். அது எமது த.தே.கூட்டமைப்பின் சாணக்கியத்திற்குக்கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
எமது தலைமைப்பீடத்தின் வேண்டுகோளையேற்று அம்பாறை தமிழ் மக்கள் நிறைய வாக்குகளை வழங்கியிருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் 2 லட்சத்திற்கு மேல் வாக்குகள் மைத்ரிக்கு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எமது தமிழ்மக்களின்சக்தியை நன்கு உணர்ந்துள்ளோம்.
ஏழாவது ஜனாதிபதியின் வெற்றியில் தமிழ்மக்களும் பங்காளர்களாக இருக்கின்றோம் என்பதை ஜனாதிபதி மறந்துவிடமாட்டார்.
கல்முனைத் தொகுதியில் 90வீத வாக்குகள் மைத்ரிக்கு அளிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனைத் தொகுதியிலுள்ள பதிவுசெய்யப்பட்ட 71254 வாக்காளர்களில் 50903 வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்த 50561 வாக்காளர்களில் 45411 வாக்காளர்கள் மைத்திரிக்கு அதாவது 89.81 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டன. மஹிந்தவிற்கு ஆக 4683 வாக்குகளே அதாவது 9.26 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. வட-கிழக்கிலேயே இங்குதான் ஆகக்குறைவான வாக்குகளாகும்.
கல்முனைத்தொகுதியில் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களே உள்ளனர். அங்கு தமிழ் வாக்காளர்கள் சுமார் 23ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது. எனது தலைமையில் த.தே.கூட்டமைப்பின் பிரசாரம் காரணமாக மைத்ரிக்கு 95வீதமான தமிழ்வாக்குகள் அளிக்கப்பட்டன.
அதன்படி கல்முனைத் தொகுதியில் மைத்ரி அமோக வெற்றியீட்டியதற்கு தமிழ் பேசும் இரு சமுகங்களும் பாரிய பங்களிப்பைச்செய்துள்ளன.
தொடர்ந்து நசுக்கப்பட்டுவந்த எம்இனம் இம்முறை ஆட்சிபீடமேறும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆட்சியில் விமோசனம் கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் எம்மக்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர். எம்மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் தமிழ்மக்களின் ஆணையினை மதித்தும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் செயற்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Post a Comment