வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று செவ்வாய் கிழமை (13.01.2015) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
ஆளம் குள கிராமத்தில் இருந்து மருத்துவ சேவை பெறுவதற்காக முற்சக்கர வண்டியில் மூலம் தனது தாயுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பயணம் மேற்கொள்ளும் போது கொழும்பு நாவலடி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றில் குறித்த ஆட்டோவானது வேகமாக வந்து மோதியதினால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இதன்போது சி.வினோதா வயது (17) என்ற யுவதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் தாயாரான சி.நல்லமுத்து வயது (45) ஆட்டோ சாரதியான காவத்தமுனையைச் சேர்ந்த எம்.எம்.இக்பால் ஆகிய இருவரும் காயமுற்றுள்ளதாகவும் இவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரனைகளின் பின்பு உறவிணர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்
Post a Comment