0
மட்டக்களப்பு மாவட்ட வறிய குடும்பங்களை  சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் வருடாவருடம் இலவசமாக வழங்கிவருகின்றது. 

இதனடிப்படையில் 2015ஆம் ஆண்டிற்கான  கற்றல் உபகரணங்களை வழங்கும் முதல் கட்ட நிகழ்வு தை பொங்கல் தினமான (15) மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிசனில் இடம்பெற்றது. 

தனிப்பட்டமுறையிலும் பாடசாலை ரீதியாகவும் வேண்டுகோள் விடுத்த வறிய குடும்பங்களை  சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு தேவையான இரண்டு இலட்சம் ரூபாய்க்குமேல் பெறுமதியான கற்றல் உபகரணங்களை இராமகிருஷ்ண மிசன் மேலாளர் வணக்கத்துக்குரிய சுவாமி சதுர்புஜானந்தஜி மகாராஜ் வழங்கிவைத்தார். 

இதன்போது ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய, சிதானந்த தபோவன சுவாமி வேதாந்தா ஆனந்தா ஜி மகாராஜ்  நிகழ்வில் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top