
மட்டக்களப்பு பிரஜைகள் சபை புதிய ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவிற்கு பாராட்டுத்தெரிவிக்கும் தீர்மானத்தை இன்று காலை நிறைவேற்றியது.
மட்டக்களப்பு கல்லடி பிரஜைகள் சபை அலுவலகத்தில் அதன் தலைவர் கே.கமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் முன்னாள் மட்டக்களப்பு மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஜூனைட் நளீமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை பிரஜைகள் சபை வாழ்த்துவதுடன் பாராட்டு தீர்மானத்தையும் நிறைவேற்றியது.

Post a Comment