0
மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பில்  ஜனாதிபதி மைத்திரிபாலவை வரவேற்கும் வைபவம்
முன்னாள் தேசிய நல்லிணக்க பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் இன்று காலை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்கும் வைபவமும் குளிர்பான சாலையும் இடம்பெற்றது.

புதுக்குடியருப்பு பிரதானவீதியில் கணேசமூர்த்தியின் இணைப்பதிகாரி ரி.தயானந்தன் தலைமையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வாழ்த்தி கோசங்களும் எழுப்ப்பட்டன

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top