நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள வெளிவிவகார கொள்கையை அனைத்து தரப்பினரிடையே சிறந்த உறவைப் பேணுவதற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கவுள்ளதாக ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் இதற்கான வைபவம் இடம்பெற்றது.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக போட்டியிட மாட்டேன்.
நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் உரிமை என்பவற்றைப் பாதுகாப்பேன்.
தனிப்பட்ட ரீதியில் வரும் சேறு பூசல்களை நான் எனது வாழ்வில் எதிர்கொண்டேன்.
குறிப்பாக அரசாங்க ஊடகங்களே இவற்றை செய்தன.
அதேபோன்று தனக்காக செயற்பட்ட ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கவலை அடைகின்றேன்.
சர்வதேச அமைப்புகளுடன், நாடுகளுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
தனது வெற்றிக்காக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஜாதிக எல உறுமய உள்ளிட்ட பொது எதிரணியில் இணைந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் தேர்தலை சுயாதீனமாகவும்,
நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ள வெளிவிவகார கொள்கையை அனைத்து தரப்பினரிடையே சிறந்த உறவைப் பேணுவதற்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கவுள்ளதாக ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் இதற்கான வைபவம் இடம்பெற்றது.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக போட்டியிட மாட்டேன்.
நாட்டின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் உரிமை என்பவற்றைப் பாதுகாப்பேன்.
அதேபோன்று தனக்காக செயற்பட்ட ஆதரவாளர்கள் மீதாக தாக்குதல்கள் குறித்து கவலை அடைகிறேன்.
சர்வதேச அமைப்புகளுடன், நாடுகளுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.
தனது வெற்றிக்காக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பிஇ ஜாதிக எல உறுமய உள்ளிட்ட பொது எதிரணியில் இணைந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் தேர்தலை சுயாதீனமாகவும், நீதியாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொண்டிருந்த தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால கூறினார்.
இதேவேளை ஸ்ரீலங்காவின் பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெளிநாட்டுத் தூதுவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நீதியாக நடத்த அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொண்டிருந்த தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால கூறினார்.

Post a Comment