பொலநறுவை மாவட்டம் கறுப்பளையில்; நேற்று செவ்வாய் கிழமை (30.12.2014) குடும்பஸ்த்தர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக வெலிக்கந்தை பொலிசார் தெரிவித்தனர்.
கறுப்பளை முத்துக்கல்லைச் சேர்ந்த அ.பற்குணராசா வயது (48) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி இடுப்பில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக பொலநறுவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இவர் வழக்கம் போல் தமது மாடுகளை மேச்சல் தரைக்கு கொண்டு சென்று விட்டு மீண்டும் அவற்றினை இருப்பிடம் நோக்கி நகர்த்துகையில் பழைய கறுப்பளை எனும் அடர்ந்த காட்டுப் பகுதியில் வைத்து எதிரே வந்த காட்டு யானையினால் முல் புதருக்குள் தூக்கி வீசப்பட்டு காயமுற்றுள்ளதாக தெரிவித்தனர்.
அதிர்ஸ்ட வசமாக உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லையென்றும் இடுப்பு வலியுடன் தாம் ஓடி தப்பியுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளானவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment