0
2015ம் ஆண்டு புதிய வருடத்தை வரவேற்கும் முகமாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று காலை சுப வேளையில் சர்வமத அனுஸ்டானமும் 2015 ஆண்டிக்கான அரசாங்க சேவை சத்திய பிரமாண உறுதிமொழியும் எடுக்கும் நிக்வும் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தில்கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள், கல்விசார் ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்,  அனைவருக்கும் பிறந்திருக்கும்புதிய வருடத்தில் இறைவனின் நல்லாசியும், அருட்கடாச்சமும், சிறந்த ஆரோக்கியமும் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வானது பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெற்றது
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கொடியேற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மலர்ந்துள்ள 2015 ஆண்டிக்கான அரசாங்க சேவை சத்திய பிரமாண உறுதிமொழியும்அனைவரினாலும் எடுக்கப்பட்டது

கிழக்கு பல்கலைக்கழகம்கடந்த வருடங்களை விட மிகவும் பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது இவ் அபிவிருத்திக்கு காரணம் பல்கலைக்கழகத்தில்கடமையாற்றும் அனைவரினதும் பங்களிப்பும் விடாத ஒத்துழைப்புமேகாணமாக அமைந்திருக்கின்றதுஎனலாம், அத்தோடு இவ் ஆண்டிலும் துறைகள்சார் அபிவிருத்திகளில் மேலும் வளம்பெறவேண்டுமென்றும் வேலை செய்யகின்ற அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான தேகத்தைக்கொடுத்து வாழ்வில் வளம் பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்கட்டும் என மதகுருமார்கள் நல்லாசிகளை வழங்கிச் சென்றனர்

புதுவருடத்திற்கான ஆசீர்வாத நிகழ்வில் கலந்துகொண்ட சர்வமத குருமார்களுக்கு பல்கலைக்கழக உபவேந்தரினால்நினைவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

பல்கலைக்கழக உபவேந்தர் மற்றும் பதிவாளர் மே.மகேசன் ஆகியோரினால் அனைத்து ஊழியர்களுக்கும் புதுவருட வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது

நடைபெற்ற புதுவருட நிகழ்வுக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் அனைவரும் வருகை தந்திருப்பதையும்ஒருவரையொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொள்வதையும், பால்சோறு மற்றும் இனிப்பு பண்டங்கள் பரிமாறப்படுவதையும் படங்களில் காணலாம்.











Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top