0
”தமிழ் சினிமா 2014” ஒரு பார்வை
2014 ஆண்டு நிறைவடையும் நிலையில் தமிழ் சினிமாவில் மொத்தம் 213 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழ்த் திரையுலகில் 200 படங்களுக்கும் மேல் வெளியாவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ஆம் ஆண்டில் 153 திரைப்படங்களே வெளியானது. ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட 80 படங்கள் கூடுதலாக வெளியாகியுள்ளன.
அதேநேரத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்கள் அதிகம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆண்டு சுமார் 25 படங்களுக்கும் மேல் நல்ல வெற்றியை பெற்று தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது.
கோலி சோடா, தெகிடி, மான் கராத்தே, குக்கூ, என்னமோ நடக்குது, யாமிருக்க பயமே, வீரம், மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, சதுரங்க வேட்டை, வேலை இல்லா பட்டதாரி, ஜிகிர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், சலீம், அரண்மனை, நாய்கள் ஜாக்கிரதை, பிசாசு, மெட்ராஸ், கத்தி, பூஜை, வெள்ளக்காரதுரை ஆகிய படங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றிப் படங்கள் ஆகும்.
பெரிய நடிகர்களை பொறுத்தவரையில் ரஜினி, விஜய் ஆகிய இருவரும் இந்த வருடம் தலா இரண்டு படங்களில் நடித்தனர். ரஜினியின் கோச்சடையான், லிங்கா மற்றும் விஜயின் ஜில்லா, கத்தி ஆகிய படங்கள் வெளியாகின. கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய இரு ரஜினி படங்களும் சுமாரான வெற்றியை பெற்றது. விஜய்யின் ஜில்லா சுமாரான வெற்றியும், கத்தி நல்ல வசூலையும் கொடுத்தது.
அஜித் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் ஒரே படம்தான் இந்த வருடத்தில் வெளியானது. அஜித்தின் வீரம் நல்ல வெற்றியை பெற்று தயாரிப்பாளரை திருப்திபடுத்திய நிலையில் சூர்யாவின் அஞ்சான் அனைத்து தரப்பினர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.
மேலும் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் சிலர் காலமாகினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா, நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், காதல் தண்டபாணி, நடிகை அஞ்சலி தேவி, தயாரிப்பாளர் இராம.நாராயணன், மற்றும் ஒளிப்திவாளர் அசோக்குமார் ஆகியோர்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top